Friday 19 December 2014

ஏன் இவளின் கதறலின் குரலொலி உன் செவிமடலை எட்டவில்லை?



ஏன் இவளின் கதறலின் குரலொலி உன் செவிமடலை எட்டவில்லை?
ஆதங்கம் ,அழுகை,கோபத்தின் வெளிப்பாடாகவே இந்த பதிவு பொறிக்கப்படுகிறது.
அழகான வார்த்தைகள் தேடி அலையவில்லை மனது, என் கோபத்தையும் அழுகையையும் அலங்கரிக்க..
என்ன நிகழ்கிறது?
எங்கிருந்து தொடங்கியது?எதன் பெயரில் நடக்கிறது?
யார் மேல் குற்றம் சொல்வது?
தவறு என்று தெறிந்தே தவறுகள்...
தவறு என்பது கூட பொருத்தமான வார்த்தை இல்லை.இது வன்முறை..
வன்முறையின் உருவம்????
எண்ணிப்பார்க்கும் போதே வலி தாங்க முடியவில்லை..அனுபவித்த அவளுக்கு??
அவன் மேல் தவறா? அவள் மேலா?ஊடகத்தின் மேலா?
இல்லை நாகரீக வளர்ச்சியின் விளைவா?ஏன் இந்த வன் உணர்வு??
உடலுக்காக மட்டும் இவ்வளவு கொடுமைகளா???:(:’(:’(:’(
அவளுக்கு என்ன தெரிந்திருக்கும்??தெரிந்து கொள்ளக்கூடிய வயதா இது???
ஏன் எங்கே சென்றது குழந்தைகளின் மீதிருந்த அன்பு,பரிவு?ஏன்,எது இவர்களை இவ்வாறு செய்ய தூண்டியது?
இவ்வாறு செய்துக்கொண்டே இருந்தால் ஆண் இல்லாத சமூகம் கேட்பதா?பெண் இல்லாத சமூகம் கேட்பதா???
அந்த பிஞ்சு எப்படி தாங்கும்?அவள் எத்துணை தொல்லைகளை ஏற்பாள்??
மங்கையராய் பிறக்க மாதவம் செய்திடல் வேண்டும் என்றான் அவன்..

வரும் தலைமுறை பெண் சக்தியை முடக்கி கொண்டே வருகிறான்....
எங்கு கொண்டு சேர்க்கும் இவளை இந்த சமூகம்????
தன் குழந்தைகளின் மீது அடுத்தவர் இந்த வன்முறையில் ஈடுபடுவது ஒருபுறம் இருக்க ,ஏன் தன் தந்தை ,தன் அண்ணன் என்று நம்பும் உறவுகளை,ஏன் இவளை ஏமாற்றுகிறது?????
இதற்கு மட்டும் 53% குழந்தைகள் ஆளாயிருக்கும் நிலைமையில் எப்படி அடுத்த தலைமுறை பெண் குழந்தைகள் சக்தி வாய்ந்ததாக,நம்பிக்கையுடன் இந்த சமூதாயத்தில் வளரும்..
இந்த உள்ளுவுணர்க்கு எவ்வாறு விளக்கம் கொடுப்பது?
குழந்தைகளின் கண்ணீர்,கதறல் எத்துணை காதுகளை சென்றடைந்து என்ன பயன்?
இந்த வன்ணுர்வை எப்படி களைய போகிறோம்??
குற்றத்தை எவர்(தன்) மேல் என்பதே குழப்பத்தின் நிலைமை என்றால் எவ்வாறு நன்நெறியை வழங்குவது???
அவள் இவ்வளவு துன்பங்களுக்கு ஆளாவாள் என்று தெரிந்திருந்தால் கருவிலே காணாமல் போயிருப்பாள்....
தொடுதலில் வித்தியாசம் எப்படி அறிவாள்???
ஆசை அழிவிற்கு காரணம் என்றால் ஆசைக்கு காரணம்?
இரசாயன மாற்றங்களுக்கு காரணம்?
ஆடை என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்???
தண்டனை மட்டும் தீர்வா?
செக்ஸ் எஜுக்கேஷன் தீர்வு என்றால் (அவளை அவளே பாதுகாத்துகொள்ள உதவும்,அதன் பற்றிய புரிதலுக்கு உதவும்) அவன் திருந்துவதற்கு வழி(லி)களே இல்லையா?
ஏன் மலர்வதற்கு முன்பே கசக்கி விடுகிறீர்கள்?
அவள் துடித்திருப்பதை நினைத்தாலே துடிதுடித்து போகிறேன்...
இந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமலும்,தாங்க முடியமலும் கண்ணீராய் கரைகிறேன்...
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை???



தீர்வுகளை நோக்கிய பயணத்துடன் .....



No comments:

Post a Comment