Wednesday 27 August 2014

நாகதீவு(தமிழீழம்)



                   

                                                     நாகதீவு(தமிழீழம்)



தமிழைத் தாங்கி சென்றது,செல்வது,செல்லும் தமிழீழமும்,தமிழ் நாடும்  தான்...

கி.மு.543ம் ஆண்டிற்கு முன்னதாகவே தமிழ் வளர்ந்து கொண்டிருந்தது நாகத்தீவில்...

ஒடிசாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட அரசனின் வருகைக்கு பின்னர் தான் சிங்கள அரசர்கள் தோன்றினார்கள்..

கி.பி.992ம் ஆண்டு முதல் அடுத்த 70 ஆண்டுகளுக்கு தமிழர்களின் நாடாகவே திகழ்ந்து அல்லவா?

2000-2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சங்க பாடல்களில் தமிழ் ஈழம்.

ஆனால்,


100 வருடங்களாக இனப்பிரச்சனை..

30 வருடத்திற்கும் மேலாக அரசியல் பிரச்சனைகள்

மூன்றரை இலட்சத்திற்கு மேலான உயிரிழப்பு..

பத்து இலட்சத்திற்கு மேலான மக்கள் அகதிகளாக மற்ற நாடுகளில்..

மொழிக்காக ஒரு மக்கள் இனமே போர் பூண்டது..


அதில் அத்துனை உயிரிழப்பு..

தன் சொந்த நாட்டையே விட்டு வெளியேறிய நிலைமை..

4000 சொற்கள் தமிழ் மொழியாகவே உள்ளது சிங்கள மொழியில்..

புவியியல் மாற்றத்தால் நாகதீபம் நகர்ந்து சென்றாலும் தமிழ் நாகரீகமும் கலையும் நிலைத்து நின்றது,நிற்பது ஈழத்தில்தான்..

பண்டையத் தமிழர்களின் கலைகளின் பிறப்பிடமாகவே ஈழம் விளங்கியது.நாகரீக வளர்ச்சிக்கு வழிகோலியது.

மொழிக்காக ஒரு இனமே வாழ்ந்து கொண்டிருக்கிறது.

                        (புகைப்படம்: நெதர்லாண்ட்)
 


தம் மொழியை பாராட்டியும் ,வாழ்த்தியும் வணங்கியும் வளர்த்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் நாடு என்று,தமிழ் மொழியைப் பேசிக் கொண்டிருக்கும் நாம்தானேஅவர்களுக்கு உதவ வேண்டும்??

தமிழை முதன்மையாக கொண்டு பிறமொழி கலக்காமல் பேசுபவர்கள் அவர்கள் அல்லவா??

ஏன் நமது சகோதர சகோதரிகளை அவர்கள் நாட்டை விட்டு அடுத்த நாட்டிற்கு செல்ல விட்டோம்???

அவர்களை காயங்களுக்கு மருந்து கூட போட முடியாத பாவிகளாய் நாம்..

மனவுளைச்சலுக்கு அவர்களை ஆளாக விட்டுவிட்டோமே?

அவர்களின் பிரச்சனைகளின் முழுமையை புரிந்து கொள்ளாமலே விட்டு விட்டோமே..

நாம் நம் கடமைகளை மறந்து அலைகிறோம்..
                

                                                        கண்ணீருடன்...