Showing posts with label பரத முனிவர். Show all posts
Showing posts with label பரத முனிவர். Show all posts

Monday, 25 August 2014

நளிந்து போன நாகரீகமாய் நாம்!இன்று...


நளிந்து போன நாகரீகமாய்  நாம்!இன்று..




          எத்துணை கலைகள்..

          எப்பேற்ப்பட்ட கலாச்சாரம்....

          பார்போற்றும் பாரம்பரியம்..
          தரணியே தலைநிமிர்ந்து பார்த்த நாகரீகம்..


ஆயக்கலைகள் 64 என்றான் கம்பன்..

காலங்கள் கடந்து செல்ல செல்ல கலையும்,கலாச்சாரமும் நாகரீக முதிர்ச்சி பெற வேண்டும்.

“காதலும் வீரமுமே தமிழர்களின் பண்பாடு”

அன்று,

காதலித்த பெண்ணையே மணந்து கொண்டார்கள்..

மணமகன்,தன் காதலிக்கு(மணமகள்) நகைப்போட்டு மணந்து சென்றான்.


அன்று, பெண் பருவமடைந்த பின்னர்தான் திருமணம் செய்தார்கள் நம் முன்னோர்கள்.


குறுந்தொகை,குறிஞ்சிப்பாட்டு,அகநானூறு,ஐங்குறுநூறும் எடுத்து சொல்கின்றன நம் முன்னோர்களின் பண்பாட்டை!!

இன்றும் முன் தமிழர்களின் பழக்கவழக்கத்திற்கும் சான்றாக  நிற்கின்றன.



தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் விளையாட்டுகளும் சான்றாக   நிற்கின்றன..


தமிழர்கள் விளையாடிக் களித்த விளையாட்டுகள் இதோ...

பல்லாங்குழி,கோழிச்சண்டை,இளவட்டக்கல்,பல்லாங்குழி,ஊஞ்சல் என்று எண்ணிலடங்கா ..

*


கிட்டிப்புள்ளு(இன்றைய மட்டைப்பந்து விளை
யாட்டிற்கு அடிகோலியதே கிட்டிப்புள்ளு என்ற தமிழர் விளையாட்டுதான்)



    அறிவும் நாகரீகமும் முதிர்வதற்கு முன்பே மனிதன் ஆடலிலும் பாடலிலும் ஈடுப்பட்டு வந்தான்.

நாகரீகம் முதிர,முதிர அவை கலைகளாக உருவெடுத்தன.

தமிழின் தொன்மையான் ஆடல் முறை பரதநாட்டியம் ஆகும்.

பரத முனிவரால் 2000 ஆண்டுகளுக்கு முன்பே நாட்டிய சாத்திரத்தை இயற்றினார்.




பாவனைகள்,ராகங்களும் தாளத்துடன் இணைந்து இணங்க நவரசங்களையும் அமிழ்தாய் அளித்து வந்தனர்..

சிவபெருமான் ஆடிய ஆடல் தாண்டவம்..

பார்வதி பெருமாட்டி ஆடிய ஆடல் இலாசியம்.

கூத்தும் குனிப்புமாய் களிக்கொண்டார்கள் நம் தமிழர்கள்.

சிகண்டி-இசை நுணுக்கம்,சியாமளேந்தர்-இந்திரகாவியம்,அறிவானர்-பஞ்சமரபு,

ஆதிவாயிலர்-பரதசேனாபதீயம்,வாணர்-நாடகத்தமிழ் நூல்கள் நடனகலைகளை விவரிக்கின்றன.

முத்தமிழின் வடிவத்தை,நகைச்சுவை உணர்வுடன் குறவஞ்சியில்(குறவஞ்சி நாட்டியம்) கூறினான் தமிழன்.

ஒயிலாட்டம்,மயிலாட்டம்,கும்மியாட்டம்,உறியாட்டம்,தப்பாட்டம் முதலியவைகளும் தமிழனின் கலைகளாக விளங்கியன.


சிற்பக்கலையில் சிறப்புற்று விளங்கினர்.இறந்த போர்வீர்ர்களின் நினைவைப் போற்றும் வகையில் கற்சிலைகளை அமைத்தனர்.

தஞ்சை பெரிய கோவிலும் ,கல்லணையும் ,குடைவரைக்கோயில்களும் இன்றும் தமிழர்களின் கட்டிடக்கலையின் சிறப்பைக் கூறாமல் இல்லை.. (

(சான்று:வேலூர் மாவட்டதில் விரிஞ்சிபுரம் என்ற ஊரில் வழித்துணைநாதர் / மார்கபந்தீஸ்வரர் கோயில். கோயிலின் உள்ளே தென்புறத்தில், "காலம் காட்டும் கல்" இருக்கிறது. அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் அந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியின் நிழல் எந்த எண்ணின் மீது விழுகிறதோ அதுதான் அப்போதைய நேரம் என்று அறிந்து கொள்ளலாம்.)


மண்பாண்டத்தில் உண்டு மகிழ்வுடன் வாழ்ந்தார்கள்.


காலம் கடக்க கடக்க கலைகள் வளர வேண்டும்,இன்று இசை,நாடகம், நடனம் போன்ற கலைகள் திரையரங்குகளில் தறிக்கெட்டு திசைமாறி அலைகிறது. நமது பாரம்பரியமும்,பண்பாடும் வைத்து வரும் திரைப்படங்கள் குறைவு.
(“காவியத்தலைவன்” படம் வெற்றிபெற வாழ்த்துகள்)

கணினியுடன் மட்டுமே இன்றைய குழந்தைகள் விளையாடுகிறார்கள்.

வரதட்சனைக் கொடுமை நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன என்பதை மறுக்க உதடுகள் இல்லை.

கலைகளும் காவியங்களும் மறந்து நளிந்துபோன நாகரீகமாய் நாம்...