Showing posts with label bharathi. Show all posts
Showing posts with label bharathi. Show all posts

Wednesday, 22 October 2014

கண்ணன் பாட்டு



கண்ணன் பாட்டு


என் குழந்தை:





ஓடி வருகையிலே –கண்ணம்மா
   உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால்-உன்னைப்போய்
   ஆவி தழுவு தடீ!
உச்சிதனை முகர்ந்தால்-கருவம்
   ஓங்கி வளரு தடீ!
மெச்சியுனை ஊரார்-புகழ்ந்தால்
   மேனி சிலிர்க்கு தடீ!


கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தன்
   கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ-கண்ணாமா!
   உன்மத்த மாகு தடீ!
சற்றுன் முகஞ் சிவந்தால்-மனது
   சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால்-எனக்கு
   நெஞ்சம் பதைக்குதடீ!
உன் கண்ணில் நீர் வழிந்தால்-என் நெஞ்சில்
   உதிரம் கொட்டுதடீ!
நண்பனை முதலே வைத்தான் என் கவிஞன்....
அதற்கு பிறகே தான் வைத்தான் தாய் தந்தையையும்...

சேவகனையும் பாட இவனால் தான் முடியும்....
வள்ளுவன் வாழ்வை வகுத்துதான் காட்டினான்....
இவனோ வாழ்க்கையாகவே காட்டினான்...
குழந்தை பற்றி பாடையிலே உணர்ச்சி மிகுந்தே உள்ளது...
இன்றைய தலைமுறையான நாம் எத்துனை பேர் இந்த கவிஞனை சுவைத்திருப்போம் என்று தெரியவில்லை..
இனியாவது தொடங்குவோம்....
நன்றிகளுடன் நான்...


Tuesday, 7 October 2014

எதிர் பாராத முத்தம்-பாரதிதாசன்

எதிர் பாராத முத்தம்-பாரதிதாசன்......”அத்தான் நீர்
மறந்தீர் என்று
மெய்யாக நான் நினைத்தேன்
என்றாள்.அன்னோன்
வெடுக்கென்று
தான் அனைத்தான்.
“விடாதீர்” என்றாள்!
கையிரண்டும் மெய்யிருக
இதழ் நிலத்தில்
கன உதட்டை ஊன்றினான்
வி
தைத்தான் முத்தம்...
உச்சிமுதல் உள்ளங்கால்
வரைக்கும் உள்ள
உடலிரண்டின்
அணுவனைத்தை
யு
ம் இன்பம் ஏறக்
கைச்சரக்கால்
காணவொண்ணாப்
பெரும்பதத்தில்
கடையுகம்மட்டும் பொருந்திக்
கிடப்பதென்று
நிச்சயித்த மறுகணத்தில்
பிரிய  நேர்ந்த
நிலை நனைத்தார்;
“அத்தான்” என்றழுதாள்..
அன்னோன்,
“வைச்சேன் உன் மேலுயிரைச்
சுமந்து போவாய்!
வரும் என்றன் தேகம்.இனிப்
பிரியா”தென்றான்..

இமைநோக என்னை நோக்கி
இருப்பாள் கண் திருப்ப
மாட்டாள்.....


காதலிக்க தெரியாதவன்/விருப்பமில்லாதவனும் காதல் கொள்வான்.....