Monday 24 August 2015

சுகமான என் பயணங்கள். .

       

சரியான சில்லரை கொடுக்கும் போது நடத்துனரின் மகிழ்ச்சி

என்ஜின் மீது கண்ணாடி தெரியுமாறு அமரும்போது உள்ள ஓட்டுநரின் திருப்தி  . .


கதைப்பேசி கொண்ட நகர்ந்த ஊர்கள்.  .


தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் நிற்கிற இளைஞன்  . .


குறுகி குறுகி மாமிக்கும் (குண்டு) மாமாவுக்கும் இடையில் உட்கார்ந்த அனுபவம்  . . .


சத்தியமாக சில்லரை இல்லை என்றதும் சத்தம் போட்ட சிரித்த அந்த நடத்துனரை மறந்ததே இல்லை.  .


நான்கு மணி நேர ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு,இறங்க போகும் நேரத்தில் Facebook id கேட்ட சம வயது பால்யன்.  .


இன்றும் ஜன்னலோர இருக்கைகாக சண்டை.  . .


தோழிக்காக விட்டுக்கொடுத்து நின்று சென்ற பயணம்  . . .


வயதானவர்கள் நின்று கொண்டிருக்கும்போது உட்கார மனமில்லாமல் எழுந்து நின்றதால் கிடைத்த நட்புகள் (இன்றும் தொடர்பில்) 


யாரென்று தெரியாத குழந்தையும் பிரிய மறுத்த தருணங்கள்.  .


ஒரு மணி நேர பயணத்தில் பிடித்து  விட்டதாக ஒரு வருடம் அலைந்த சீனியர்.  .


சாயுங்கால பயணங்களில் பார்க்கத் தவறியதில்லை,வண்ண மயில்களின் அணிவரிசையை காவிரிபடுகையில்.  .


ஜன்னலோர தென்றலின் சுகத்திற்கு அடிமையாகி போனது.  .


இராணுவ உடையணிந்து நிற்கிற இளைஞனை பார்க்கும்போது பேருந்து நகர வேண்டாம் என்று வேண்டிக் கொண்டது.  .


சில நேரம் தாயாகி,தங்கையாகி,சகோதரியாகி,மகளாகி,காதலியாகி 

பல நேரம் தோழியாகி அன்புடனும் ஆவலுடனும் தொடர்கிறது பயணம்.     

தொடரும்;)


Thursday 23 July 2015

நினைவில்

    ஆறா வடு

நீ
புண்படுத்தி 💏சென்ற வார்த்தைகள்😪
இன்றும் ஆறா வடுவாய்
இன்னும் இன்னும்
புகைந்து சுடுகிறது.  .


மறக்கிறேன் என்று
நினைத்தே கொள்(ல்)கிறேன் உ(எ)ன்னை.  .

Tuesday 21 July 2015

சமீபத்தில் கிறுக்கியவை

    தேடல்      
 உன் கா(மம்)தல் முழுவதையும்
 என் கழுத்திலும்
 தோளிலுமே

 தேடி அலையும் போது

 மரணித்து மரணித்து  மீண்டும் மீண்டும் ஜனனம் பெற்று சிலிர்த்தே போகிறேன்

(கற்பனை மட்டும்தான்பா

❌❌எங்க அம்மாட்டலாம் சொல்லிடப்பிடாது என்ன )                                                                                 உனக்கு மட்டும்     
                                                      உனக்கான கவிதை அவ்வளவாய்  இன்றளவும் எழுதப்பட வில்லை.  .

உனக்கான கவிதை  இன்றளவும் எழுதப்பட வில்லை.

உனக்கான கவிதை இன்னும்  எழுதப்படாமலே இருக்கிறது

உனக்கான கவிதையை நான் இன்றும் எழுதப் போவதில்லை.  .                  
நான் போகும் பாதையில் நீ
60ல் செல்லும் உன் வேகம் 20 ஆக குறையும் போது என் இதய துடிப்பின் வேகம் அதிகரிக்காமல் இல்லை.  . . நான் செல்லும் பாதையில்🌉🌌 இன்று நீ

                                                                           பீலீங்சு
சகோதரி என்ற பிறகு அடுத்த வார்த்தைத் தடுமாறி தடுக்கிறது.  .

 அண்ணேண்கிட்ட என்னத்த பேசனு அப்டியே விட்டறது


காதலன்
கவிதை எழுதத் தெரியாதவனை காதலிப்பதாய்(பொய் சொன்னாலும் பரவால)

Sunday 3 May 2015

ஞாயிற்றுக்கிழமை என்பதால் மட்டும்!!!!!




எழுதத்தொடங்கும் போது
இவ்வளவு நாள் ஏன் என்னைத் தொடவில்லை என்று செல்லமாய் சினுங்கியது என் பேனா!!

03/05/15

           
ஊர் திருவிழா:
திருவிழாவில் பின்னாடியே சுற்றியது ஒரு கூட்டம்...
(மொக்க ஃபிகருக்கே ரவுண்டு கட்டுவானுகளே-ங்கிற டயலாக்லாம் நினைக்கக்கூடாது என்ன???)
கடந்துசெல்ல முயற்ச்சிகையில்
                  “பெண்களுக்கே முன்னுரிமை”
என்று நகர்ந்தும் அருகினில் அவன்...(அறும்பு மீச குறும்பு பார்வ)
காதோரம் ஒரு முனுமுனுப்பு”உன் பெயர் என்ன என்று??”
கேட்டும் கேட்காததாய் நகர்ந்தேன்..இன்னும் கேட்கிறது...
(எவ்ளோதான் டெக்னாலஜி வளந்தாலும் நீங்க திருந்த மாட்டிங்கடா)

திருவிழாக் கடை:
பிம்பங்கள் கண்ணடியில் விழ,கண்களும் சேர்ந்து விழ
கைகள் தலைக்குச் சென்றது..
(இதுக்கு பேரும் அனிச்சைசெயல் தானோ???)
பள்ளிக்கூட நண்பன் சந்திப்பு:
(“எங்கேயோ பார்த்த நியாபகம் ,என்றே தான் சொல்லும் நாள் வரும்” பாடல் வரி தன்னிச்சையாக மனதில்)
பேசத்தெரியதவளாய் ஆகிவிட்டேன் சில நொடிகளில்...
கண்கள் நான்கு வார்த்தை பேசியது..
உதடுகள் இரண்டு வார்த்தை பேசியது...
(அந்த நாளு வார்த்த”இன்னுமாப்பா என்ன நியாபகம் வச்சுருக்க”...அப்பிடியே யோசிக்கிறது...அப்ப அந்த ரெண்டு வார்த்த?????அதலாம் சொல்ல முடியாது போப்பா)
தாயிடம்:
(சொல்லிருக்ககூடாதுதான் இருந்தாலும் சொல்லிப்பார்த்தேன் )
“மா,அந்தப்பையன் அழகா இருக்கான்-ல “ என்றேன்.
“பருவத்துல பண்ணிக்குட்டிகூட அழகதான் தெரியும்” என்றாள்..
உண்மைதான் போல..( மைண்ட் வாய்ஸ்:உன்க்கிட்ட போய் சொன்னேன் பாரு...)

நடந்தது இதான்:
குறும்புகள் மனதில் குறுகுறுக்க
இருப்பினும் குறுக்கிக்கொண்டு நல்லவளாகவே (நடித்து) முடிந்தது...





Friday 13 March 2015

என் பேனா மை என்னிடம் கோபித்துக்கொள்ளவில்லை


எழுததான் ஆசை..
எதை எழுத வேண்டுமென்று தெரியவில்லை...
இருப்பினும் எழுதுகிறேன்...
எதை எழுதுகிறேன் என்று தெரியாமலே...

எழுது எழுது என்கிறது மனது.
எதை எழுத வேண்டுமென்று மட்டும் கூற மறுக்கிறது...
எழுதி எழுதி பார்த்தும் என்ன எழுதுவதென்று மட்டும் தெரியவில்லை...
இருப்பினும் கை  நிறுத்தவில்லை...
கிறுக்குகிறேன் என்று தெரிந்தும்
  என் பேனா மை என்னிடம் கோபித்துக்கொள்ளவில்லை...
தொடர்ந்து எழுதுகிறது..
அதற்கும் தெரியவில்லை எதை எழுதுகிறோம் என்று...

நிறுத்த மனமில்லை...
ஏதும் தோன்றவில்லை..
இருந்தும் எழுதுகிறேன்.....
ஏன் எழுதுகிறேன்ன்???
எல்லோரும் எழுதுகிறார்கள் என்றா???
எழுதினால் எனக்கென்ன கிடைக்கப்போகிறது???
ஏன் எதைப்பற்றி எழுதுவதென்று தெரியாமலே எழுதுகிறேன்???
ஏன் இப்படி ஒரு பைத்தியக்காரத்தனம்???
ஏன்,எதற்கு இப்படி தோன்றுகிறது???
விடைகள் தெரியாமல் எழுதுகிறேனா????விடைகள் தேடி எழுதுகிறேனா???

                        ************************************
img src

reply here