Tuesday, 29 July 2014

வாழ்க தமிழ்

                            வாழ்க தமிழ்


    வறுமை என்றதும் நினைவில் வருவது பணப்பற்றாக்குறையினால் தள்ளாடி நிற்பது தான்!

ஆனால் இன்றோ ??

நமது மொழியின் நிலை?

தமிழர்களின் 'நா' தாய்மொழி பேச தயங்குவதேன்?????

தமிழ் பேசுவதை தரக்குறைவு என்று நினைப்பதேன்??????

இளைய தலைமுறையே!

பிற மொழி கலந்து பேசி தமிழ் மொழியின் நிலையை கவலைக்கிடமாக்கியதேன்?????

தமிழர்களே தமிழ் படிக்க தயங்குவதேன்?????

தமிழ் வழி கல்வி எங்கே?????

தமிழ் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதேன்?????

தமிழின் நிலை எங்கே செல்கிறது?????

அழியப்போகும் மொழிகளின் நிலையில் நம் மொழிக்கு எட்டாவது நிலை ஏன்??????

ஏன் இந்த நிலைக்கு இட்டுச் சென்றோம் நம் மொழியை?????

வெட்கம்! நாம் ஏன் இந்த நிலைக்கு நம் மொழியை இட்டுச் சென்றோம்????தமிழ் வெறும் மொழியா?

உலக நாகரித்திற்கே பங்களிப்பு செய்ததல்லவா நம் மொழி!!!

இப்படிப்பட்ட மொழியா இந்த அழிவை  நோக்கி செல்கிறது?????விழித்துக்கொள் தமிழனே!!!!இந்த தலைமுறையே தமிழைக் கற்கவில்லையென்றால் எவ்வாறு வரும் தலை முறை தமிழை வரவேற்கும்????

பார் போற்றிய நம் மொழியை பாதுக்காக்க வேண்டாமா?

பிற மொழி கற்கிறேன் என்று  தாய்மொழியை மறந்து கொண்டிருக்கிறாய் தமிழனே!!!!!!


வறுமையிலிருக்கும் நமது மொழியை என்றும் அழியா மொழியாக மாற்றுவோம் என்று இன்றாவது உறுதி கொள்வோம்...


வரும் தலைமுறைக்கு தமிழைக் கற்பித்து தமிழ் வாழ வழிச்செல்வோம்..

வீழ்வது யாராயினும் வளர்வது தமிழாகட்டும்!!!!!

Monday, 28 July 2014

மொழி சிறப்பு                        மொழி சிறப்பு

தாய்மொழியாம் தமிழ் மொழி!
என்னே!உன் கற சிறப்பு!
‘நா’ மடக்கச் சொல்லிக்கொடுத்து நாவடக்கம் கற்று தந்தீர்.
கோடி பூக்கள் மலரப்போகிறது,உன் சிறப்பைக் கூற!
இதோ,இங்கு உனக்காக மாணவத் தலைமுறைகள்(புதிய தலைமுறைகள்) வலைப்பூவை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
தொல்காப்பியன் தொடங்கியதிலிருந்து வளர்ந்து கொண்டே இருக்கிறாய்.
கம்பன் கற்பித்துக் கொண்டே இருக்கிறான்.
உலக பொதுமறையை ஏந்தி கொண்டிருக்கிறாய்.
உன்னில் தான் எழுத்துகளும் அதிகம், எழுச்சிகளும் அதிகம்,ஏற்றங்களும் அதிகம்..அதனால் தான் உலக பொதுமறையை தமிழில் இயற்றினான் போலும்!
தமிழன் என்று சொல்லடா!தலை  நிமிர்ந்து நில்லடா! என்றவன் என் மொழியை வசைபாடுவதற்கு கண்டிபதற்கும் நான் பயன்படுத்த மாட்டேன் என்றார் மகாத்மாவிடம்.
வாழ்வதற்கும்,வாழ வைப்பதற்குமே அன்றிலிருந்து பயன்படுகிறாய்.
என்னே அழகு!

அவன் சொன்னான் என் கல்லறையில் நான் ஒரு தமிழ் மாணவன் என்று எழுதி வையுங்கள்-ஜி.யு.போப்.இறப்பு வரை,இல்லை இறந்த பிறகும் பயணத்திருக்கிறாய் பிற மொழியை தாய்மொழியாய் கொண்டவனுக்கும்..
தமிழில் பெயரையே மாற்றுமளவுக்கு உன் மேல் அன்பு கொண்டிருந்தால் அவன் வாழ்வை சரித்திரமாக்கினாய்-வீரமாமுனிவர்.
காணக்கிடைத்த செல்வமாய்,புதையலை கால்கடக்க தேடிச் சென்று ஒருங்கிணைத்து தமிழ் நூல் வாழ வழிச்செய்தார்!எங்கள் தாத்தா உ.வே.சாமி நாத ஐயர்.
என்னே!உன் சிறப்பு...  

வணக்கம் தமிழ்                        வணக்கம் தமிழ்
     
        தமிழ் மொழி போல உலகின் பெரும் பான்மையான மொழிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மொழி வேறு எதுவும் இல்லை. தமிழ் இனம் போல் உலகம் முழுவதும் பரந்து வாழும் இனம்  வேறு எதுவும் இல்லை.சப்பானிய அறிஞர்களான சசுமுசிகா,அகிராஃபியூசிவாரா,மினோருகோ ஆகிய மூவரும் இணைந்து பல ஆண்டு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு சப்பானிய மொழியோடு தொடர்புடையது என்பதை அதிகாரப்பூர்வமாக 1973ல் உலகுக்கு அறிவித்தனர்.
    தாய்லாந்து தாய்மொழியிலும்,கொரியன் மொழியிலும்,இந்தோனேசிய மொழியிலும், தென் ஆப்பிரிக்காவின் பல மொழியிலும் தமிழ்ச்சொற்கள் பல திரிந்த நிலையில் வழங்கி வருகின்றன. இந்திய மொழிகளிலேயே ஏன் உலக மொழிகளிலேயே மூத்த மொழி நம் தமிழ் மொழி. பூம்புகார் அகழ்வாய்வு தரும் தகவல்கள் மூலம் கி.மூ.10000 ஆண்டுகள் நாகரிக நாகரிகத்தில் சிறந்திருந்தனர்.தமிழர்கள் இன்று உலகில் மொத்தம் 149 நாடுகளில் வாழ்கின்றனர்.
   உலகம் ஆற்று வெள்ளத்தில் அழிவை சந்தித்துக் கொண்டிருந்த காலத்தில் ஆற்றின் குருக்கே அணையைக் கட்டி ஆற்று நீரில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும்,பாசனத்திற்கு உபயோகிக்கஅவும் முடியும் என்று உலகின் முதல் அணையாம் கல்லணையை கட்டி உலகிற்கே வழிகாட்டியவன் நம் தமிழன் கரிகாலன்,யானைகளை அடக்கி கட்டிடங்கள் கட்டவும்,போருக்கு பயன்படுத்தவும் கற்றுக்கொடுத்தவன் தமிழன்,உலகின் முதல் கப்பல் படிய நிறுவியது.தமிழன்,மொத்த வாழ்க்கையையும் மூன்று அத்தியாயத்தில் பிரிந்து இரண்டடியில் கொடுத்து உலகமே வியந்து பின்பற்றும் திருக்குறளை கொடுத்தது தமிழன்.
    சேக்ஷ்பியரின் புத்தகங்களைப் படித்து பெருமை கொள்ளும் நமக்கு கம்பரைப்பற்றி அறிந்து கொள்ள் முடிவதில்லை. நீயுட்டனைத் தெரிந்த அளவுக்கு தமிழ்ச் சித்தர்களை பற்றித் தெரிவதில்லை.பண்டைய தமிழரின் கண்டுபிடிப்புகளையும் பெருமைகளையும்,கற்றலையும்,கலைகளையும் பொதுவுடைமையாகவும், உலகறியவும் செய்திருந்தால் இன்றைய நவீன உலகின் அனைத்து துறைகளின் கண்டு பிடிப்புகளிலும் தமிழன் முன்னோடியாக இருந்திருப்பான்.
  எனவே நம் பெருமையை நாம் மட்டுமே பேசிக் கொண்டிருப்பதையும் தாண்டி நம்மை பற்றி உலகறியச் செய்ய  வேண்டும். நம் செய்யுள்களும்,இலக்கியங்களும்,அறிவியலும் ,வானியலும் ,கலையும் ,நயமும்,வீரமும்,மரபும் பிறமொழி பேசுபவர்களுக்கும் உலக மொழிகளில் எடுத்துரைப்போம்,உலகமெங்கும் நம்மை அரியச் செய்வோம்.ஓர் இனத்தின் ஆற்றலும்,பெருமையும் அதை அடுத்த தலைமுறைக்கு அதை கொண்டு சேர்ப்பதில் தான் உள்ளது.