Monday, 11 August 2014

திண்ணை வீடு?




  திண்ணை வீடு?
கிராமத்து திண்ணை வீடுகள் நிறைய கதைகள் சொல்லும்...

திண்ணைகளில் ஒளிந்திருந்தது, தமிழ் பண்பாடு.

களிப்பான கலாச்சாரம்!!!!

மறந்து போன மடமைகள் நாம்...


முந்தைய தமிழன் வீடுகளில்,

திண்ணை என்றொரு அங்கமுண்டு..

வழிப்போக்கர்கள் ஓய்வெடுப்பார்கள்..

விருந்தோம்பலும் நடக்கும்...

சம்மணமிட்டு அமர்ந்தார்கள்.....





சாப்பிடும் போது,

‘கால்கலுக்கு குருதி ஓட்டம் தேவையில்லை’ என்று அன்றே அறிந்தவர்கள்..

                       ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்று

அன்புக்கு அடித்தளம் அமைத்து வாழ்ந்தவர்கள்.....

பாட்டி வைத்தியத்தில்  நோயை தீர்த்தார்கள்...

கோலம் போடுவதில் கூட இரக்கத்தை காட்டியவர்கள் தமிழச்சிகள்..



இன்றைய தமிழன் வீடுகளில்,

ஆங்காங்கே, அடுக்கு மாடி கட்டிடங்களும்,

அவற்றை சுற்றி இறுக கட்டிக் கொண்டு நிற்கும் சுற்று சுவர்களும் தான்!!!

திண்ணை மண்ணோடு மண்ணாகி விட்டது!!!

சுதந்திரம் என்ற பெயரில் சொந்தம் மறந்து அலைகிறோம்!!!!

நாற்காலியில் அமர்ந்துதான் உண்கிறோம்,

உணவு முறையையும் மாற்றி கொண்டு நோய்களை சம்பாதித்து கொண்டிருக்கிறோம்..

கோலம் போடுவதும் , தாவணி உடுத்துவதும்

விழாக்காலங்களில் மட்டுமே நிகழ்கிறது இங்கு!!!!.


பூ வைப்பதற்கு புது புது அர்த்தகள்!!!
தமிழ்,அரசியல்வாதிகளின் உடையாகவே மாறிவிட்டது வேட்டி!!!
பாட்டி சொன்ன கதைகளை மறந்து போன தலைமுறைகளாய் வாழ்கிறோம்...

“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து”-என்ற குறளை மறந்து விட்டோம் போலும்..

கிராமம் என்றொடு அமைப்பு இல்லையெனில் என்றோ முற்றிலும் அழிந்திருக்கும் தமிழர் பண்பாடு...

கலாச்சாரத்தையும் ,பண்பாட்டையும் அழித்து வருவதா நாகரீக வளர்ச்சி??


Tuesday, 5 August 2014

அறிவியல் தமிழ்



அறிவியல் தமிழ்

தமிழ்,

     உலக பொதுமறையை உலகிற்கு உணர்த்திய மொழி!

     ஔவையாரின் கைவண்ணத்தையும் காட்டிய மொழி!

     நீதிக்கு போரடிய பேதையின் காவியத்தைக் கண்டு கலங்கிய மொழி!

     இலக்கணத்திற்கும் முதலிலே இணங்கிய மொழி!

     விலைமாதுவின் மகளையும் உலக குருவாக்க உதவிய மொழி!

     உறவின் பிரிவின் வலியையும் உணர்த்திய மொழி!

     பழமையான மொழிகளையும் உபயோகிக்க கொடுத்த மொழி!

     கம்பரையும் கவிபாட வைத்த மொழி!

     தூதுக்கும் துணைபுரிந்த மொழி!

     அகத்தையும்,புறத்தையும் கூட வகுத்தளித்த மொழி!

     அனைத்து மதத்தையும் ஏற்றுக்கொண்ட மொழி!




     இத்துணை சிறப்பு வாய்ந்த நம் மொழியில்

     அறிவியல் மட்டும் எழுதப்படாமலே உள்ளதே!!!!!!!



அணுவைப் பிளந்து ஆழ்கடலைத் துளைத்து குறுக தறித்தக் குறள்”

அணுவையும் அன்றே எழுதினோம்.

ஆனால் அறிவியலாய் வளரவில்லை....

இன்றோ,அணுவின் தந்தை மேலைநாட்டுக்காரன்..

அறிவியல் தமிழில் எழுதவேண்டும்...

அறிந்துக்கொள்ளுதல் நமது மொழியிலயே இருக்க வேண்டும்.

தமிழன்!!

அறிவை தமிழில் பெறும்போது புரிதல் பல பரிமாணங்களில் பிறக்கிறது.

கம்பராமாயணம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

ஏன் கணிதவியல் மொழிபெயர்ப்பு செய்து தமிழுக்கு கொண்டு வரவில்லை??...



பொறியியல்,தொழில் நுட்பம்,மருத்துவம்,விவசாயம் எல்லாம் தமிழில் எழுதப்பட வேண்டும்.

மாணவர்கள் தமிழில் படிக்கவேண்டும் இவைகளை...

எவன் ஒருவன் தன் சொந்த மொழியில் அறிவைப் பெறுகிறானோ,

அவனே முழுமையான அறிவைப் பெறுகிறான்!!!

என்று அறிவியல் தமிழில் எழுதப்படுகிறதோ அன்றிலிருந்து தமிழ் உலக மொழியாக மாறும் என்பதில் ஐயமில்லை..

விஞ்ஞான நூல் தமிழில் இயற்றப்படவேண்டும்...

தமிழன் அறிவியலை தாய் மொழியிலயே பருக வேண்டும்...

அறிவோம் அறிவியல் தமிழை!!!
                    பகிர்வோம் அறிவியல் தமிழை!!!




Tuesday, 29 July 2014

வாழ்க தமிழ்





                            வாழ்க தமிழ்


    வறுமை என்றதும் நினைவில் வருவது பணப்பற்றாக்குறையினால் தள்ளாடி நிற்பது தான்!

ஆனால் இன்றோ ??

நமது மொழியின் நிலை?

தமிழர்களின் 'நா' தாய்மொழி பேச தயங்குவதேன்?????

தமிழ் பேசுவதை தரக்குறைவு என்று நினைப்பதேன்??????

இளைய தலைமுறையே!

பிற மொழி கலந்து பேசி தமிழ் மொழியின் நிலையை கவலைக்கிடமாக்கியதேன்?????

தமிழர்களே தமிழ் படிக்க தயங்குவதேன்?????

தமிழ் வழி கல்வி எங்கே?????

தமிழ் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதேன்?????

தமிழின் நிலை எங்கே செல்கிறது?????

அழியப்போகும் மொழிகளின் நிலையில் நம் மொழிக்கு எட்டாவது நிலை ஏன்??????

ஏன் இந்த நிலைக்கு இட்டுச் சென்றோம் நம் மொழியை?????

வெட்கம்! நாம் ஏன் இந்த நிலைக்கு நம் மொழியை இட்டுச் சென்றோம்????



தமிழ் வெறும் மொழியா?

உலக நாகரித்திற்கே பங்களிப்பு செய்ததல்லவா நம் மொழி!!!

இப்படிப்பட்ட மொழியா இந்த அழிவை  நோக்கி செல்கிறது?????



விழித்துக்கொள் தமிழனே!!!!



இந்த தலைமுறையே தமிழைக் கற்கவில்லையென்றால் எவ்வாறு வரும் தலை முறை தமிழை வரவேற்கும்????

பார் போற்றிய நம் மொழியை பாதுக்காக்க வேண்டாமா?

பிற மொழி கற்கிறேன் என்று  தாய்மொழியை மறந்து கொண்டிருக்கிறாய் தமிழனே!!!!!!


வறுமையிலிருக்கும் நமது மொழியை என்றும் அழியா மொழியாக மாற்றுவோம் என்று இன்றாவது உறுதி கொள்வோம்...


வரும் தலைமுறைக்கு தமிழைக் கற்பித்து தமிழ் வாழ வழிச்செல்வோம்..

வீழ்வது யாராயினும் வளர்வது தமிழாகட்டும்!!!!!