Friday, 29 August 2014

இனிவரும் மகாயுகம் ஆண்டிற்கு பின் தமிழ்!!!



இனிவரும் மகாயுகம் ஆண்டிற்கு பின் தமிழ்!!!

நிகற்பம் ஆண்டுகள் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறது....வளர்ச்சியில் சிறிது சிதைவு..சீக்கிரம் சரி செய்துவிடுவோம்.

***********

மகாயுகம் ஆண்டுகள் முன் செல்வோம்..

ஊர் பலகையெல்லாம் நம் மொழியில்..

உலக மொழியாக நம் மொழி..

அனைவரும் நம் மொழியை பேசி ஆனந்தம் பெறுகிறார்கள்..

விமான நிலையத்திலும்,புகைவண்டி நிலையத்திலும் தமிழில் அறிவிப்புகள்..

அனைத்து கடைகளுக்கும் தமிழ் பெயர்கள்..

அமெரிக்கர்களும் தமிழ் பேசுகிறார்கள்..

பிறமொழி கலவாத தமிழ் பெயர்கள் மட்டும் கொண்ட குழந்தைகள்..

கி.மு 14 பில்லியனிலிருந்து நமது முன்னோர்கள் வளர்த்த நம் மொழியை பேணி காக்கின்ற பெருமை.


தன் வாழ்நாள் முழுவதும் அலைந்து திரிந்து,ஓலைச்சுவடிகளை திரட்டி,நூல்களாக்கி நமக்கு கொடுத்து சென்ற நமது தாத்தாவை பற்றிப் பேசிக்கொண்டிருக்கிற பெருமை..

அனைத்து தொழில்  நுட்பத்திலும் நம்மவர்களும்,நமது மொழியும்,

கணினி குறியீடுகளும்(coding) நமது மொழியில் வளர்ந்து விட்டது..

அளப்பற்ற ஆன்ந்தம்..

மறுபிறவி உண்மையெனில் அன்று பிறக்க ஆசை..

கனவுகள்  நினைவாகிய மகிழ்ச்சியுடனே மரணமடைய ஆசை...

100 கனவுகள் கண்டால் 6 கனவுகளாவது பழிக்கும் என்றான் கவிஞன்..

நான் ஆயிரம் கனவுகள் காண்கிறேன்.அனைத்தும் நமது மொழியைப் பற்றிக் காண்கிறேன்.ஒன்று பழித்தாலும் அடுத்த மகாயுகம் ஆண்டுகளுக்கு அழிவில்லை..


                            ********************
மது மொழி நம் எண்ணத்தை மட்டும் வெளி படுத்தும் கருவி அல்ல...நமது மொழி பல கோடி ஆண்டுகளின் பாரம்பரியம்..நமது முன்னோர்கள் நமக்களித்த கொடை..இவற்றை வளர்க்க அவர்கள் சிந்தியது வியர்வை அல்ல,அவை அவர்களின் குருதி. அத்துனையும் அழிக்க போகிறோமா நாம்???? இந்த தலைமுறை சிலருக்கு தமிழ் எழுத தெரியவில்லை..அடுத்த தலைமுறைக்கு வெறும் பேச்சாக மாறி விடுமோ நம் மொழி???....

இல்லை ..இல்லவே இல்லை..


ஒட்டு மொத்த இளைய தலைமுறையும் ,

நாம் நம் மூத்த தலைமுறைக்கு சத்தியம் செய்து கொடுப்போம்,நம் மொழியை வளர்க்க பாடுபடுவோம் என்று..

நமது குழந்தைகளை தமிழ் படிக்க வைப்போம்..தமிழில் அறிவியல் எழுதுவோம்..தமிழுக்கு அழிவு என்பதை பகல் கனவாக்குவோம்..

                           நன்றி

                     


No comments:

Post a Comment