Wednesday, 22 October 2014

கண்ணன் பாட்டு



கண்ணன் பாட்டு


என் குழந்தை:





ஓடி வருகையிலே –கண்ணம்மா
   உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால்-உன்னைப்போய்
   ஆவி தழுவு தடீ!
உச்சிதனை முகர்ந்தால்-கருவம்
   ஓங்கி வளரு தடீ!
மெச்சியுனை ஊரார்-புகழ்ந்தால்
   மேனி சிலிர்க்கு தடீ!


கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தன்
   கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ-கண்ணாமா!
   உன்மத்த மாகு தடீ!
சற்றுன் முகஞ் சிவந்தால்-மனது
   சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால்-எனக்கு
   நெஞ்சம் பதைக்குதடீ!
உன் கண்ணில் நீர் வழிந்தால்-என் நெஞ்சில்
   உதிரம் கொட்டுதடீ!
நண்பனை முதலே வைத்தான் என் கவிஞன்....
அதற்கு பிறகே தான் வைத்தான் தாய் தந்தையையும்...

சேவகனையும் பாட இவனால் தான் முடியும்....
வள்ளுவன் வாழ்வை வகுத்துதான் காட்டினான்....
இவனோ வாழ்க்கையாகவே காட்டினான்...
குழந்தை பற்றி பாடையிலே உணர்ச்சி மிகுந்தே உள்ளது...
இன்றைய தலைமுறையான நாம் எத்துனை பேர் இந்த கவிஞனை சுவைத்திருப்போம் என்று தெரியவில்லை..
இனியாவது தொடங்குவோம்....
நன்றிகளுடன் நான்...


No comments:

Post a Comment