கனவுகளை நோக்கி????
சுதந்திர காற்றை சுவாசிக்க விரும்புகிறேன்.!
சுதந்திர உலகில் வாழ விரும்புகிறேன்!
கலை பல கற்கவும்,மொழி பல பழகவும்,
மனித மனங்களுக்கு உதவவும்,
கானகத்தினும் சிறிதுகாலம் வசிக்கவும்,
அனைத்து மக்களுக்கும் அன்பை அளிக்கவும்,
உலக அமைதி பெற போராடவும்,
தமிழ் நிலைக்க உதவவும்,
பெரியார் வாதியாகவும் தான்
ஊனையும்,உயிரையும் செலவிடதான் ஆசை!!!!
ஆனால் இந்த சமூகமோ,
பெண்களுக்கு நிறைய விதிகள் அளித்திருக்கிறதே!
எங்கே செல்வதானாலும் முன்னறிவிப்பு
குறித்த நேரத்திற்குள் வீடு திரும்ப ஆணையிடுகிறது..!
பதினெட்டு வயது முடிந்ததிலிருந்து,
திருமணம் செய்ய அறிவுரை/வற்புறுத்தல்...
நகைகளுடனும்,பண்ட பாத்திரங்களுடனும் சேர்த்து மற்றொரு
வீட்டிற்கு தத்து கொடுத்து விடுதல் பெயர்-கல்யாணமாம்!!
அவர்களுக்கு உழைக்கவே நேரம்
கழிகிறது பல பெண்களுக்கு!!
வம்சத்தை வளர்க்க இப்படியெல்லம் ஒரு தண்டனையா??
உடலுக்கும் ,மனதுக்கும் துணை தேவைதான்!
தனிமை கொல்லும் என்பதை யானும் அறிவேன்!
அதற்காக ஒரு குடும்பத்திற்குள் மட்டும் புதைத்து கொள்ள மனம் ஏகவில்லை!
உடலுக்கு ஆசையை கொடுத்துவிட்டு,
மனதிலுள்ள கனவுகளை கலைக்க இடமில்லை என்பதே நிதர்சனமான உண்மை!!
பெண்களுக்கு கட்டுபாடுகளும் அதிகம்,சில அடக்குமுறைகளும் உண்டு என்பதை
இன்றளவும் மறுக்க முடியவில்லை!!
என் மகளுக்கு என் போல் கனவிருந்தால் அது நனவாக வாய்ப்புள்ளது!
எனை சுமந்த என் தாய்க்கு மட்டும்,
ஏன் அவள் பிள்ளையின் பாதுகாப்பே முதலில் வந்து நிற்கிறது?
ஆயிரம் காரணங்கள் சொல்லி நான் அவளை தடுத்து பார்த்தாலும்
அவள் மணமகன் தேடுவதை விடுவதாய் இல்லை??
என் ஆசையை
நிறைவேற்றதான் அவளுக்கும் ஆசை!!!
அதை நினைத்தே சில நேரம்
சிலாகித்து போகிறேன்!!!
என் கணவனின் மகளுக்கோ/மகனுக்கோ
தாயாய் இருப்பதைவிட,
தாயில்லாமல் இருக்கும்
குழந்தைகளுக்கு தாயாய்
இருக்கவே மனம்
ஏங்குகிறது!!
உண்மையை உரக்க சொல்ல
ஆசைப்பட்டு
வார்த்தைகள் தேடி தேடி
அழுகிறேன்!!!!
நன்றிகள்!!!