Thursday, 21 August 2014

தமி(ழ்)ழரின்,தமிழ்நாட்டின் பற்றிய துளிகள்


      தமி(ழ்)ழரின்,தமிழ்நாட்டின் பற்றிய துளிகள்

தமிழ் மற்றும் தமிழரின் பெருமைகள் மற்றும் தனித்துவம்.

இதோ,

தமிழில் மொத்தம் 247 எழுத்துகள் உள்ளது..12 உயிரெழுத்து,18 மெய்யெழுத்து,

216 உயிர்மெய்யெழுத்து,1 ஆயுத எழுத்து...


இதில் 7 உயிரெழுத்துகள் தனித்து பொருள் தரும்.

அவை

*     ஆ-பசு,

*     -ஈதல்,பூச்சி,

*     உ-சிவபெருமான்,

*     -தசை,

*     ஏ-அம்பு,

*     ஐ-ஐந்து,அழகு,வியப்பு,

*     ஓ- வினா, மதகு



32 உயிர் மெய்யெழுத்துகளும் தனித்து நின்று பொருள் தரும்..

கா-சோலை, காத்தல்
கூ-பூமி, கூவுதல்
கை-கரம், உறுப்பு
கோ-அரசன், தலைவன், இறைவன்
சா-இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ-இகழ்ச்சி, திருமகள்
சே-எருது
சோ-மதில்
தா-கொடுத்தல், கேட்பது
தீ-நெருப்பு
து-கெடு, உண், பிரிவு,உணவு,இறகு
தூ-வெண்மை, தூய்மை
தே-நாயகன், தெய்வம்
தை-மாதம்
நா-நாக்கு
நீ-நின்னை
நே-அன்பு, நேயம்
நை-வருந்து, நைதல்
நொ-நொண்டி, துன்பம்
நோ-நோவு, வருத்தம்
நௌ-மரக்கலம்
பா-பாட்டு, நிழல், அழகு
பூ-மலர்
பே-மேகம், நுரை, அழகு
பை-பாம்புப் படம், பசுமை, உறை
போ-செல்
மா-மாமரம், பெரிய, விலங்கு
மீ-ஆகாயம், மேலே, உயரம்
மு-மூப்பு
மூ-மூன்று
மே-மேன்மை, மேல்
மை-அஞ்சனம், கண்மை, இருள்
மோ-முகர்தல், மோதல்
யா-அகலம், மரம்
வா-அழைத்தல்
வீ-பறவை, பூ, அழகு
வை-வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ-கௌவுதல்

சங்கம்
நிகழ்ந்த ஆண்டு
நிகழ்ந்த இடம்
புலவர்களின் எண்ணிக்கை
நூல்கள்
முதற் தமிழ்ச் சங்கம்
கி.மு.4400
தென்மதுரை
4449
(சிவன்,
அகத்தியர்)
பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்.
(அனைத்து நூல்களும் கடலில் மூழ்கி விட்டன)
இரண்டாம் தமிழ்ச் சங்கம்
கி.மு.3700
கபாடபுரம்
3700
அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்
(தொல்காப்பியம் மட்டுமே கிடைத்தது)
மூன்றாம்
தமிழ்ச் சங்கம்
கி.மு.1850
மதுரை
449
அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்
நாவலன் தீவு:
       சிலப்பதிகாரம் மூலம் முச்சங்க வரலாற்றையும் அறியலாம்.
குமரி கண்டத்தில் தான் தமிழும் தமிழனும் பிறந்தனர்.இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.வரலாற்று அதிசயங்கள் அங்கு தான் நிகழ்ந்தது.
முன்பு,குமரிகண்டம்  “நாவலன்தீவு” என்றழைக்கப்படுகிறது.
இதற்கு பெனீசியர்களின் கல்வெட்டுகள் சான்றாக உள்ளது.
நாம் 2000 வருடம் பழமையானவர்கள் அல்ல.
20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம்!

                                 **************

உலகில் கப்பல் கண்டுபிடித்தவன் தமிழன்:
       உலகின் முதல் கப்பலையும் கப்பல் படையும் வைத்திருந்தவன் தமிழன்.அவர்கள்   இராஜ இராஜசோழனும் அவன் மகன் இராசேந்திர சோழனும் ஆவான்.
உலகத் தமிழ் மாநாடுகள்:
*     முதல் உலகத் தமிழ் மாநாடு        -1996,மலேசியா-கோலாலம்பூர்
*     இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு    -1968,இந்தியா-சென்னை
*     மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு     -1970,பாரிஸ்
*     நான்காம் உலகத் தமிழ் மாநாடு     -1974,இலங்கை-யாழ்பாணம்         
*     ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு -1981,மதுரை
*     ஆறாம் உலகத் தமிழ் மாநாடு       -1987,மலேசியா-கோலாலம்பூர்
*     ஏழாம் உலகத் தமிழ் மாநாடு        -1989,மொரீசியஸ்
*     எட்டாம் உலகத் தமிழ் மாநாடு -1995,தஞ்சாவூர்
*     ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாடு
(உலகத் தமிழ் செம்மொழி மாநாடு)  -2010,இந்தியா,தமிழ்நாடு-கோவை


உலகத் தமிழ் இணைய மாநாடு:
 
*     முதல் உலகத் தமிழ் இணைய மாநாடு          -1997,சிங்கப்பூர்
*     இரண்டாம் உலகத் தமிழ் இணைய மாநாடு      -1999,சென்னை
*     மூன்றாம் உலகத் தமிழ் இணைய மாநாடு -2000,சிங்கப்பூர்   
*     நான்காம் உலகத் தமிழ் இணைய மாநாடு       -2001,மலேசியா         
*     ஐந்தாம் உலகத் தமிழ் இணைய மாநாடு         -2002,அமெரிக்கா
(கலிஃபோர்னியா) 
*     ஆறாம் உலகத் தமிழ் இணைய மாநாடு         -2003,சென்னை         
*     ஏழாம் உலகத் தமிழ் இணைய மாநாடு          -2004,சிங்கப்பூர்         
*     எட்டாம் உலகத் தமிழ் இணைய மாநாடு        -2009,செர்மனி    
*     ஒன்பதாம் உலகத் தமிழ் இணைய மாநாடு -2010,கோவை
(உலகத் தமிழ் செம்மொழி மாநாடுடன் இணைந்து நடத்தப்பட்டது)
*     பத்தாம் உலகத் தமிழ் இணைய மாநாடு         -2011,அமெரிக்கா         (பெனிசுலோவியா)
*    பதினொன்றாம் உலகத் தமிழ் இணைய மாநாடு  -2012,இந்தியா,தமிழ் நாடு-சிதம்பரம்
*    பனிரெண்டாம் உலகத் தமிழ் இணைய மாநாடு  -2013,மலேசியா
*    பதிமூன்றாம் உலகத் தமிழ் இணைய மாநாடு    -2014,புதுச்சேரியில் நடக்க உள்ளது.        


 நோபல் பரிசு வாங்கிய தமிழர்கள்:
*     ச.வெ.இராமன்
*     சுப்ப்ரமணியன் சந்திரசேகர்
*    வெங்கட் ராமன் ராமகிருஷ்ணன்
                      ****************
செண்பகராமன்-ஜெய்ஹிந்த்:
       
    ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்திற்கு சொந்தமானவர்-செண்பகராமன் என்ற தமிழர். ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் பொறியியல் துறையின் டாக்டர் பட்டம் பெற்றார்.பட்டப்படிப்புக்கு பிறகு, ஜெர்மனியில் தங்கியிருந்தபடியே இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி மூலம் இந்திய விடுதலைக்கு செண்பகராமன் ஆதரவு திரட்டத் தொடங்கினார். ஒருமுறை ஹிட்லர் தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது "சுதந்திரம் பெறக் கூடிய தகுதி இந்தியர்களுக்கு கிடையாது" என்று கூறினார். இந்த கருத்து அருகில் இருந்த செண்பகராமனுக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியது. "இந்தியாவின் பாரம்பரியம், இந்தியத் தலைவர்களின் திறமைகளைப் பற்றி தரக்குறைவாக நீங்கள் பேசுவதை என்னால் அனுமதிக்க முடியாது" என்று ஆவேசமாக கூறிய செண்பகராமன், சற்றும் அஞ்சாமல் அனைவரின் முன்னிலையிலும் உலகமே பார்த்து மிரண்ட சர்வாதிகாரி ஹிட்லருடன் இதுதொடர்பாக நீண்ட நேரம் விவாதித்திருக்கிறார்.அடுக்கடுக்கான ஆதாரங்களுடனான செண்பகராமனின் வாதத் திறமையை கண்டு வியந்துப்போன ஹிட்லர், இறுதியில் பணிந்தார். தன்னை மன்னித்துக் கொள்ளும்படி அவர் கேட்க செண்பகராமனோ, வார்த்தைகளால் மன்னிப்பு கேட்பதை விட எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேளுங்கள் என்று வற்புறுத்த, ஹிட்லரும் அப்படியே செய்திருக்கிறார்.(எழுத்தாளர் தமிழச்சி பகிர்ந்த செய்தி)
                      **************************





No comments:

Post a Comment