மொழி சிறப்பு
தாய்மொழியாம் தமிழ் மொழி!
என்னே!உன் ‘ழ’கற சிறப்பு!
‘நா’ மடக்கச் சொல்லிக்கொடுத்து நாவடக்கம் கற்று
தந்தீர்.
கோடி பூக்கள் மலரப்போகிறது,உன் சிறப்பைக் கூற!
இதோ,இங்கு உனக்காக மாணவத் தலைமுறைகள்(புதிய தலைமுறைகள்)
வலைப்பூவை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
தொல்காப்பியன் தொடங்கியதிலிருந்து வளர்ந்து கொண்டே இருக்கிறாய்.
கம்பன் கற்பித்துக் கொண்டே இருக்கிறான்.
உலக பொதுமறையை ஏந்தி கொண்டிருக்கிறாய்.
உன்னில் தான் எழுத்துகளும் அதிகம், எழுச்சிகளும் அதிகம்,ஏற்றங்களும்
அதிகம்..அதனால் தான் உலக பொதுமறையை தமிழில் இயற்றினான் போலும்!
தமிழன் என்று சொல்லடா!தலை நிமிர்ந்து நில்லடா! என்றவன் என் மொழியை
வசைபாடுவதற்கு கண்டிபதற்கும் நான் பயன்படுத்த மாட்டேன் என்றார் மகாத்மாவிடம்.
வாழ்வதற்கும்,வாழ வைப்பதற்குமே அன்றிலிருந்து
பயன்படுகிறாய்.
என்னே அழகு!
அவன் சொன்னான் என் கல்லறையில் “நான் ஒரு தமிழ் மாணவன்” என்று எழுதி வையுங்கள்-ஜி.யு.போப்.இறப்பு வரை,இல்லை
இறந்த பிறகும் பயணத்திருக்கிறாய் பிற மொழியை தாய்மொழியாய் கொண்டவனுக்கும்..
தமிழில் பெயரையே மாற்றுமளவுக்கு உன் மேல் அன்பு கொண்டிருந்தால்
அவன் வாழ்வை சரித்திரமாக்கினாய்-வீரமாமுனிவர்.
காணக்கிடைத்த செல்வமாய்,புதையலை கால்கடக்க தேடிச்
சென்று ஒருங்கிணைத்து தமிழ் நூல் வாழ வழிச்செய்தார்!எங்கள் தாத்தா உ.வே.சாமி நாத
ஐயர்.
என்னே!உன் சிறப்பு...
No comments:
Post a Comment