வாழ்க தமிழ்
வறுமை என்றதும் நினைவில் வருவது பணப்பற்றாக்குறையினால்
தள்ளாடி நிற்பது தான்!
ஆனால் இன்றோ ??
நமது மொழியின் நிலை?
தமிழர்களின் 'நா' தாய்மொழி பேச தயங்குவதேன்?????
தமிழ் பேசுவதை தரக்குறைவு என்று நினைப்பதேன்??????
இளைய தலைமுறையே!
பிற மொழி கலந்து பேசி தமிழ் மொழியின் நிலையை கவலைக்கிடமாக்கியதேன்?????
தமிழர்களே தமிழ் படிக்க தயங்குவதேன்?????
தமிழ் வழி கல்வி எங்கே?????
தமிழ் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதேன்?????
தமிழின் நிலை எங்கே செல்கிறது?????
அழியப்போகும் மொழிகளின் நிலையில் நம் மொழிக்கு எட்டாவது
நிலை ஏன்??????
ஏன் இந்த நிலைக்கு இட்டுச் சென்றோம் நம் மொழியை?????
வெட்கம்! நாம் ஏன் இந்த நிலைக்கு நம் மொழியை இட்டுச்
சென்றோம்????
தமிழ் வெறும் மொழியா?
உலக நாகரித்திற்கே பங்களிப்பு செய்ததல்லவா நம் மொழி!!!
இப்படிப்பட்ட மொழியா இந்த அழிவை நோக்கி செல்கிறது?????
விழித்துக்கொள் தமிழனே!!!!
இந்த தலைமுறையே தமிழைக் கற்கவில்லையென்றால் எவ்வாறு
வரும் தலை முறை தமிழை வரவேற்கும்????
பார் போற்றிய நம் மொழியை பாதுக்காக்க வேண்டாமா?
பிற மொழி கற்கிறேன் என்று தாய்மொழியை மறந்து கொண்டிருக்கிறாய்
தமிழனே!!!!!!
வறுமையிலிருக்கும் நமது மொழியை என்றும் அழியா மொழியாக
மாற்றுவோம் என்று இன்றாவது உறுதி கொள்வோம்...
வரும் தலைமுறைக்கு தமிழைக் கற்பித்து தமிழ் வாழ
வழிச்செல்வோம்..
வீழ்வது யாராயினும்
வளர்வது தமிழாகட்டும்!!!!!