Monday, 22 September 2014

தமிழச்சி



                       தமிழச்சி

 “ஆட்டிட ஆடுகின்ற
பாவைநான் அல்லள்:சற்றுப்
பாட்டையில்  நடந்தால் என்ன?
பலருடன் பழகி பேசி
வீட்டிற்கு வந்தால் என்ன?”

“அவரவர் தாமே தம்மை
அரண்செய்து காத்தால் கற்புத்
தவறுமோ?.......
“.................
இன்றைய நிலையை மாற்ற
இறப்பதா?வேண்டாம்! வேண்டாம்!
கொன்றிடவேண்டும் தீமை
குறுக்கிட்டால்!எடடீ வாளை!”
ஓவியமாய் காவியத்தை வரைந்திருக்கிறான் கவிஞன்..(வாணிதாசனின் முதல் காவிய படைப்பிலிருந்து-தமிழச்சி)உவமைகள் மிக சிறப்பு...

Sunday, 14 September 2014

நூல் வெளியீட்டு விழா.



                    நூல் வெளியீட்டு விழா..
மஹாசிவராத்திரியும் சில தேனீர் கோப்பைகளும்-யாழி..





மரபின் மைந்தன் முத்தையா தலைமையில் இனிதே நிறைவுற்றது..
யாழியின் மூன்றாவது கவிதை தொகுப்பு அரங்கேற்றம்..

கிருஷ்ணமூர்த்தி பேசியவை மனதில் நிற்கின்றன..


ஆண்கள் தான் நிறைய பேர் சாதிக்கிறார்களாம்..பெண்கள் குறைவாகதான் சாதிக்கிறார்களாம்.ஏனென்றால் ஆண்களுக்கு கிடைப்பது போல் மனைவிமார்கள் பெண்களுக்கு கிடைப்பதில்லையாம்..
இரவு நேரத்தில் கிணற்றைப் பார்த்தேன்..என்னை தூக்கிவிட சொன்னது நிலா...
கவிஞர் கனிமொழிஜியின் குழந்தை(இஷாமித்ரா) தேவதை..